யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 17 பொலிஸார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்யாது அதனை அலட்சியப்படுத்திய குற்றத்திற்காகவே இவர்கள் அனைவரும் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸ் அதிகாரியொருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் அனைத்துப் பொலிஸாருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட்டுள்ளதுடன் உப பொலிஸ் பரிசோதரொருவரும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.