லண்டனில் வடக்கு ஆளுனருக்கு எதிர்ப்பு – புலம்பெயர் செயற்பாடாளர் கைது!

0

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே லண்டனில் தமிழ் மக்களுடன் நடத்த திட்டமிட்ட சந்திப்புகள் தமிழ்மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. எனினும், அதற்குப் பதிலாக வேறு இடங்களில் சந்திப்புக்களை நடத்த ரெஜினோல்ட் குரே தரப்பு தீவிரமாக முயன்றது. இதனால் மேற்கு லண்டனில் ஒரு இடமும் மத்திய லண்டனில் இன்னொரு இடமும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்கு எதிராக தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதனால் அந்த சந்திப்பும் பிசுபிசுத்துப் போனது. இதனையடுத்து பெருமளவிலான காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கட்டுப்படுத்த முனைந்தனர். கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டன் சென்றுள்ள இலங்கையின் வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிற்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் YMCA Indian Student Hostelக்கு எதிரில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 தொடக்கம் மாலை 7 மணி வரை நடைபெற்றுள்ளது.

இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்க பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும் வடக்கு ஆளுநர் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்பட வேண்டுமென கூறி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது குறித்த விடுதிக்கு ஆளுநர் சென்றபோது, ‘இனப்படுகொலை சிங்கள அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ !’ என ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் முனைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.