புலிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு இல்லை – போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா

0

ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு துரோகம் இழைத்த எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லையென சிறிலங்காவின் போர்க்குற்ற முன்னாள் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேக்கா நேற்று தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கு எதிராக நாட்டை பிரிப்பதற்காக பிரிவினைவாதப் போராட்டம் நடத்தியவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நஷ்டஈட்டை அவ்வாறானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பெற்றுக் கொடுப்பது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர் ஒருவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பது பற்றி அமைச்சர் சரத் பொன்சேக்காவின் கருத்தை கோட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். கடமையில் ஈடுபட்டிருக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். என்கின்ற போதும் அரசியலமைப்புக்கு முரணாக நாட்டை பிரிக்க கைகளில் ஆயுதம் ஏந்தியவர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பது நியாயமில்லை.

அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.