வவுனியாவில் முதன்முறையாக ஒரே விடுதியில் ஐந்து தம்பதியினர் ! மகிழ்ச்சியில் மகிழ்ச்சியில் திளைப்பு ! படங்கள் உள்ளே
வவுனியா புகையிரத நிலையத்திற்க்கு முன்பாக உள்ள புலேஸ் விருந்தினர் விடுதியில் ஐந்து புதுமண தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு வைபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வு பற்றி மேலும் அறியவருவதாவது நேற்று முந்தினம் (30.09.2018) அன்று வவுனியா புகையிரதநிலையத்திற்க்கு முன் உள்ள புலேஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஐந்து புதுமண தம்பதியினருக்கு வரவேற்ப்பு வைபவம் ஒன்று இடம்பெர்றுள்ளது தம்பதிகளின் நண்பர்கள் வட்டம் இந்த வைபவத்தை சிறப்புடன் நடாத்தியுள்ளனர்.
புதிதாக திருமணம் முடித்த ஐந்து புதுமணத்தம்பதிகளின் நண்பர்கள் ஒரே நேரத்தில் ஐந்து தம்பதிகளையும் ஒரே இடத்தில் வரவேற்று விருந்து உபசாரத்தையும் மேற்கொண்டுள்ளனர் இவ்வாறு ஐந்து தம்பதிகளையும் ஒரே இடத்தில் வரவேற்பு நிகழ்வுகளை செய்ததென்பது வவுனியாவிலேயே இதுவே முதல் தடைவை என்பது குறிப்பிடத்தக்கதுடன் சிறந்த நண்பர்கள் வட்டத்திற்க்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த நண்பர்கள் வட்டம் பல சமூகசேவைகளையும் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.