சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் தனக்கே இருப்பதாக தெரிவித்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் மூலம் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூடிய விரைவில் நாடாளுமுன்றத்தை கூட்டி அரசியல் சாசனத்திற்கு அமைய தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வொன்றை காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் அலரி மாளிகையில் வைத்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது குறுகிய அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரிணல் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.