விஜய்சேதுபதியின் குரு ‘கூத்துப்பட்டறை’ ந.முத்துசாமி காலமானார்

0

ஜிகிர்தண்டா படத்தில் நடிப்பு கற்றுக்கொடுக்க வரும் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருப்பார். ந. முத்துச்சாமியை நினைவு கூறும் வகையில் தான் இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த ந. முத்துசாமி (82) தெருக்கூத்தை தமிழ்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். தமிழில் நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல நாடக கலைஞர்களை உருவாக்கியுள்ளார். 5 நூல்களை எழுதி பல நாடகங்களை இயக்கியும் உள்ளார். 2012-ம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

நாடக நடிகர்கள், இயக்குநர்களை உருவாக்கியவர் ந.முத்துச்சாமி. தற்போது இருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெரும் ஆதர்சமான படைப்பாளராக இருந்து வந்துள்ளார். ஜிகிர்தண்டா படத்தில் நடிப்பு கற்றுக்கொடுக்க வரும் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருப்பார். ந. முத்துச்சாமியை நினைவு கூறும் வகையில் தான் இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் வரும் நாசர் கதாபாத்திரமும் இவரை நினைவு கூறும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கும்.

திரைத்துறையில் நடிப்பில் சிறந்து விளங்கும் பல நடிகர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். நடிகர் பசுபதி பல ஆண்டுகள் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் அக்கவுண்டடாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. நாடக கலையில் நவீனத் துவத்தை புகுத்திய ஈடு இணையற்ற கலைஞரை காலம் கை கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.