13 வயதில் வங்கி நடத்தி வரும் மாணவன் ! அசாதாரண திறமை ! குவியும் விருதுகள்

0

2000 பேர் வாடிக்கையாளர்களாக உள்ள ஒரு வங்கியை ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா என்ற 13 வயது மாணவன் கடந்த ஆறு ஆண்டுகளாக நடாத்தி வருகின்றான்.

ஜோஸுக்கு ஏழு வயதாகவிருக்கும் போது மாணவர்கள் தங்கள் தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்காமல் தாமே தமது செலவினங்களைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு திட்டத்தை யோசித்தான்.

இந்தத் திட்டத்தின் படி பள்ளியில் ஒரு வங்கியைத் தொடங்கி அதில் மாணவர்களை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். உறுப்பினராகும் மாணவர்கள் தங்கள் வீட்டில் பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.

அந்தப் பொருட்களை விற்ற பின்னர் அந்தத் தொகை அந்தந்த மாணவர்கள் பெயரில் இருப்பு வைக்கப்படும்.

மாணவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது அந்தத் தொகையை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த யோசனையை முதலில் தனது பள்ளியில் சொன்ன போது பலரும் ஜோஸைப் பார்த்து சிரித்துள்ளனர். ஆனாலும், மனம் தளராத ஜோஸ் பள்ளி முதலவரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளான்.

முதலில் வங்கியில் இணைவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது ஆறு வருடங்களுக்குப் பின்னர் இந்த வங்கியின் உறுப்பினர் எண்ணிக்கை 2000 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த-2013 ஆம் ஆண்டு மட்டும் இந்த வங்கியின் மூலம் ஒரு டன் மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை பெரு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதேவேளை, இந்த இளம் சாதனையாளனுக்கு பெரு நாட்டிலும், ஏனைய வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகள் கிடைத்த வண்ணமுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.