முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் , கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது .
ஆரம்பத்தில் இருந்தே சர்கார் படம் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது ,முதலில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி தவித்த சர்கார் ஒருவாறு அதிலிருந்து மீண்டு திரைக்கு வந்தது .
சர்கார் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் அதிமுக அரசியல்வாதிகளை கடுப்பாக்கியதனால் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் ஓடிக்கொண்டிருக்கின்றது .
இப்போது என்னடாவென்றால் நம்ம கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இளையதளபதி விஜய் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளார் .
நடிகர் விஜய் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து அடுத்தவர்களின் பிழைப்பில் மண் அள்ளிபோடுவதையே வேலையாக வைத்துள்ளார் என விஜயகாந்தின் மனைவி தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டிள்ளார்.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தெரிவிக்கையில் , நடிகர் விஜய் அடுத்தவர்களையும் சற்று யோசித்து பார்த்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
மேலும் ,சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டுமே தவிர சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சினிமாவில் மூழ்கி மோதல்கள் சர்ச்சைகளில் ஈடுபட கூடாது.
தற்போது வெளிவரும் படங்களை அவதானிக்கும் போது, திரையுலகினர் திரைப்படங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை வெற்றிகரமாக ஓட்ட நினைக்கிறார்களா? என்று சிந்திக்க தோன்றுகின்றது என்று தெரிவித்துள்ளார் .
பிரேமலதாவின் இந்த கருதினால் விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் .
விஜயகாந்தின் மனைவி இப்படி ஒரு கருத்து தெரிவிப்பர் என்று விஜய் தரப்பினர் எதிர்பார்க்கவில்லையாம் .
விஜய் மீது பிரேமலதாவுக்கு அப்படி என்ன கோபம் என்று யோசிக்கின்ரீர்களா?
விஜய் கட்சி ஆரம்பித்தால் அது தேமுதிகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்ற பீதி தான் பிரேமலதாவின் திடீர் கொந்தளிப்புக்கு காரணம் .
விஜய் நடித்து வரும் அண்மைக்கால படங்கள் விஜயின் அரசியல் மீதான நாட்டத்தினை தெளிவாக எடுத்து காட்டுகின்றது .
எதிர்காலத்தில் விஜய் அரசியலில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது ,
விஜய் அரசியலில் குத்தித்து புது கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க கட்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜய்யின் கட்சிக்கு தாவி விடுவார்கள் என்ற பீதி இப்போதே பிரேமலதாவுக்கு ஏற்பட்டு விட்டது .
ஆக விஜய்யின் சர்கார் படம் அதிமுக அரசியல்வாதிகளை மட்டும் அல்லாது அனைத்து அரசியல் கட்சிகளையும் கிலி கொள்ள செய்துள்ளது .
பிரேமலாதாவின் கருத்துக்கு விஜய் தரப்பு என்ன கூற போகின்றது ?விஜய் ரசிகர்களின் பதிலடி எவ்வாறு இருக்க போகின்றது என்பதற்காக நெட்டிசன்கள் காத்திருக்கின்றார்கள் .தெறிக்க விடலாமா ?……????
எத்தனை நடிகா்கள்
வேண்டுமானாலும் – கட்சி
துவங்கலாம்,
அவை கடுகளவு
விஜயகாந்தின் தே. மு. தி. க
என்னும் இ௫ம்புக் கோட்டையை
தகர்க்க இயலாது!…
– அ. ஆனந்ததுரை (புதுச்சேரி)