அமைச்சர் ஆனேன் – ஆனால் ஐ.தே.க வை விட்டு விலகவில்லை! காமடி தலைவன் வடிவேல் சுரேசின் புது டெக்னிக்!!

0

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டேனே தவிர ஐக்கிய தேசிய கட்சியை விட்டு ஒரு போதும் விலகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 5 வருட ஆணையை வழங்கி இருந்த சந்தர்ப்பத்தில் வெறுமனே இரண்டரை, மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் தன்னிச்சையாக பாராளுமன்றத்தை கலைத்ததன் மூலம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களினது ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.

இதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மனோ கணேஷன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றம் ஜனநாயக ரீதியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆகவே அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தலை வணங்குவதுடன், எங்களது பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும், அவர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பிலும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதற்கும் சந்தர்ப்பமாக நான் முழுமையாக ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு சேவையாற்ற தீர்மானித்துள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.