அரசியல் யுத்தத்தில் மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார்!- ஜனாதிபதி

0

தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

எது நடந்தாலும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க தான் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தெளிவாக அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

என்னை கெட்டவராக காட்ட முயற்சிப்பவர்கள் நாளை அல்லது எதிர்காலத்தில் நான் சிறந்த மனிதன் என்பதனை அறிந்துகொள்வார்கள்.

இந்தப் போரில் இரண்டு விடயங்கள் எனக்கு இல்லாமல் போகும். மிகவும் சந்தோசத்துடன் நான் அவற்றை ஏற்றுக் கொள்கின்றென். எனக்கு இல்லாமல்போகும் இரு விடயங்களில் ஒன்று என்னுடைய பதவி. அடுத்தது என்ன? என்னுடைய உயிர். இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.