இன்று ரணில் பக்கம் கட்சி தாவவுள்ள 3 உறுப்பினர்கள் ! இஞ்சி தின்ற மங்கி போல மஹிந்தவின் நிலை

0

இலங்கையில் அரசியல் செயற்பாடுகள் மோசமடைந்துள்ள நிலையில், கட்சித் தாவல்களும், பேரம் பேசுதலும் அதிகரித்துள்ளது.

இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், வெற்றியை தக்க வைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இந்நிலையில் இன்றைய தினம் 3 கட்சித்தாவல்கள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மூவர் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 வரை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுதினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. இதன்போது மஹிந்த – ரணில் தரப்பினர் தமக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உறுப்பினர்களுக்கான பேரம் பேசும் நடவடிக்கைகள் திரைமறைவில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.