இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செய்த ஆபாச செயலினால் பதறியடித்து ஓடிய பெண் எம்.பி ! வைரலாகும் வீடியோ

0

சமகாலத்தில் இலங்கை நாடாளுமன்றம் வன்முறைகளும், கேலிக்கூத்துகளும் நிறைந்த காட்சிக்கூடமாக மாறி வருகின்றது.அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இரு பிரதான கட்சிகளுக்கு கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.நாட்டின் பிரதான நாடாளுமன்றில் ஆபாச செயற்பாடுகள் அண்மைக்காலமாக அரங்கேறியுள்ளன.

இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் நிலையின் போது, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் கடற் தொழில் ராஜாங்க அமைச்சரான, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேட்டியை கிளப்பி காட்டி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த ஆபாசமான காட்சியை பார்த்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடியுள்ளார்.இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போதும் இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

இவ்வாறான அசிங்கமான சம்பவங்கள் நாட்டு மக்களை பெரிதும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.