ஜனாதிபதியின் நாடுளுமன்ற கலைப்பு தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதி மன்றத்தில் இடம்பெற்றது .இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது .
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மன்றிற்கு வருகைதந்த மஹிந்தவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை கேலி செய்த சம்பவத்தினாலேயே இவ்வாறான பதற்ற நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் உதயகம்மன்பில ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் கூடிநின்ற பொது மக்கள் திருடன் திருடன் என்றும் தவளை என்றும் கூச்சல் போட்டு கேலி செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை கேலி செய்த மக்களை நோக்கி பதிலுக்கு சத்திமிட்டனர். இதன் காரணமாகவே நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இச்சம்பவத்தையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாகனத்திலேறி நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.