என்னை செருப்பால் அடிக்கலாம் ! செருப்பைக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வினோத அரசியல்வாதி

0

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மக்களிடம் ஒரு கடிதத்தையும் செருப்பையும் கொடுத்து வாக்குகளை சேகரித்து வரும் சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.

7ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அந்தந்த கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஆக்குல ஹனுமந்துலு என்பவர் போட்டியிடுகிறார்.

ஆக்குல ஹனுமந்துலு வாக்கு கேட்டு செல்லும் ஒவ்வொரு நபரிடமும் அவர் ஒரு கடிதத்தையும் இரு செருப்பையும் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். அந்த கடிதம் ராஜினாமா கடிதம் ஆகும்.

என்னை ஜெயிக்க வைத்துவிட்டீர்கள் என்றால் நான் ஒழுங்காக மக்களுக்காக பாடுபடுவேன்.

ஒருவேளை நான் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் தான் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி தன்னை பதவியில் இருந்து விலக்குங்கள்.

நான் கொடுக்கும் செருப்பில் என்னை அடித்து என்னிடம் வேலை வாங்குங்கள் என கூறியுள்ளார்.

இவரது செயல் தெலிங்கானாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.