கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்து எடுத்த நடவடிக்கையை சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன.
இலங்கையிலுள்ள சிங்கள வாராந்தப்பத்திரிகைகள் சனிக்கிழமையே வெளியாகிவிடுவது வழமை . அந்தவகையில் பெரும்பாலான பத்திரிகைகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்துவெளியிட்டுள்ளன. இதனைத்தவிர வெளிநாட்டு சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன.
சிங்கள பௌத்த இனவாதப்பத்திரிகையாக பார்க்கப்படும் திவயின பத்திரிகையின் வார இறுதி தலைப்புச்செய்தியில்’ மைத்திரியைப் படுகொலைசெய்ய விசேட குழு: ஆயுதங்களையும் கோரினர் ‘ என செய்திவெளியிட்டுள்ளது.
இதேவேளை ‘தேசய’ பத்திரிகையோ ‘வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம்: உங்கள் உதவி தேவையில்லை’ என ஜனாதிபதி சிறிசேன ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸிடம் தெரிவித்ததாக செய்திவெளியிட்டுள்ளது.
i