ஒரே நாளில் காலா சாதனையை காலி செய்த சர்கார் ! கடுப்பில் ரஜனி ரசிகர்கள்

0

முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி நடிப்பில் நேற்றையதினம் தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் திரைப்படம் உலகின் பல நாடுகளிலும் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது .

ரஜனியின் காலா படத்தின் சாதனையை இளையதளபதியின் சர்கார் ஒரே நாளில் தகர்த்தெறிந்துள்ளது .

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த ஜூன் 7ந் தேதி திரைக்கு வந்தது .120 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகமெங்கும் வெளியாகி களைகட்டியது .

ரஜனியின் காலா படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.76 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளில் வசூலித்த 1.52 கோடி சாதனையை காலா தகர்த்திருந்தது .

இந்நிலையில் இளைய தளபதி விஜய் மீண்டும் தானே தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்துள்ளார் ,விஜய் நடித்த சர்கார் படம் நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் ரூ. 2.37 கோடி ரூபாவினை வசூலித்து காலாவின் 1.76 கோடி சாதனையை தகர்த்துள்ளது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது .

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ,

சர்கார் படத்தின் புதிய சாதனையினால் தளபதி ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றார்கள் .அதே வேளை ரஜனி ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.