கஜா புயல் கோரத்தாண்டவம் ! உதவிக்கரம் நீட்ட இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு ! என்ன உதவி தெரியுமா?

0

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கனடாவின் டொரண்டோவில் டிசம்பர் 24-ஆம் திகதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.