கஞ்சா வாங்கி கொடுக்காமையினால் இளைஞர்கள் மீது பொலீசார் தாக்குதல் ! முல்லைத்தீவில் சம்பவம்

0

முல்லைத்தீவு பொலீசாரின் வற்புறுத்தலுக்கு அமைவாக கஞ்சா வாங்கி கொடுக்காத காரணத்தால் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கைதுசெய்துள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்
கடந்த 19.11.18 அன்று இரவு 9.00 மணியளவில் முள்ளியவளை மாஞ்சோலைப்பகுதியில் வீதியால் சென்ற இளைஞர்களை மறித்த முல்லைத்தீவு பொலீசார் அவர்களிடம் நீராவிப்பிட்டிப்பகுதிக்கு சென்று கஞ்சா வாங்கிக்கொண்டுவாருங்கள் உங்களை நாங்கள் பிடிக்கின்றோம் பின்னர் விடுவித்துவிடுவோம் என வற்புறுத்தியபோது அதற்கு மறுத்த இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு மூவரையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு சென்று அங்கு வற்புறுத்தி கள்ளசாராயம் விற்றதாக கையெழுத்து வாங்கிவிட்டு பொலீஸ் பிணையில் விடுவித்துள்ளார்கள்.

பொலீசாரின் தாக்குதலில் காயமடைந்த பூதன் வயலினை சேர்ந்த 32 அகவையுடைய க.டிசாந்தன், 27 அகவையுடைய தே.அனிதரன், 28 அகவையுடைய ம.மயூரன் ஆகியோர் இரவோடு இரவாக சென்று முல்லைத்தீவு நகரில் உள்ள சட்டவாளர் ஒருவரிடம் முறையிட்டுள்ளார்கள் சட்டவாளர்கள் அவர்களின் முகத்தில் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதை அவதானித்துவிட்டு அவர்களை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெறுமாறு அறிவித்துள்ளார்.
இன்னிலையில் 20 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மூவரும் சென்று சிகிச்சை பெற்றவேளை தே.அனிதரனின் காதாலும் மூக்காலும் இரத்தம் வடிந்ததான் காரணத்தால் அவரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவ மனை கொண்டு சென்றுள்ளதாகவும் ஏனைய இவரும் மருத்துவ மனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலீசாரின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட தாங்கள் யாரிடம் இதனை சென்று முறையிடுவது என்று தெரியாத நிலையில் சட்டவாளரின் உதவியினை நாடியுள்ளதாகவும் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் முல்லைத்தீவு பொலீசார் பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.