கருணாவின் டுவிட்டார் பக்கம் தமிழீழ சைபர் குழுவால் முடக்கம்!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தை கருணா பயன்படுத்தி வந்தமை காரணமாக அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாகவும் அத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் சார்ந்த சில விடயங்களையும் கருணா தனது அரசியலுக்காக வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ சைபர் குழு என்ற அமைப்பினாலேயே கருணாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் தொடர்பாக கருணா வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இலங்கையின் அரசியல் நெருக்கடி குறித்து தாம் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளின்படியே இலங்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருணா தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.