சிவசக்தி ஆனந்தனுக்கெதிராக சாள்ஸ் நிர்மலநாதன் எடுத்துள்ள அதிரடி முடிவு!

0

கடந்த வெள்ளிக்கிழமை (11.02.2018) அன்று மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய (11.03.2018) தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.

அத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது என்பது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் என செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை அடுத்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் எனது பெயர் குறிப்பிட்டு 30 கோடி பணமும் அமைச்சு பதவியையும் பெற்று மஹிந்த அணியுடன் இணைவதற்கு இருப்பதாக தனது உரையாடல் மூலம் கூறியிருக்கின்றார். இந்த செய்தி ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் 02.11.2018 அன்று வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் குறித்த கருத்து எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவருடைய இக்கருத்தால் நான் மன வேதனை அடைகின்றேன். எனது அரசியல் பிரவேசம் தமிழ் மக்கள் இறைமையுடன் வாழ வேண்டும். அதேவேளை சுய இலாபமற்ற அரசியல் வாதியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்பவன் நான். ஆகவே அவரால் கூறப்பட்ட கருத்தினை விசாரித்து நீதியின் பிரகாரம் அவருக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு முறைப்பாடு செய்கின்றேன். என குறப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.