சென்னையில் இறைச்சி சர்ச்சையால் மக்கள் பீதி – அறிக்கை கேட்கும் நீதிபதி!

0

சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியதால் சர்ச்ரச ஏற்பட்டிருந்த நிலையில், இறைச்சி அழிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜோத்பூரிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் கடந்த 17ஆம் திகதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புதுறைக்க இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர், பொதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 5 இற்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000கிலோ இறைச்சியிருப்பது கண்டுபிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்நதால் அது நாய்க்கறியாக இருக்குமென்ற சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், குறித்த சில பொதிகளை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின் கால்நடைமருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற ஆய்வில் கைப்பற்றப்பட்டது, ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சியின் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, இந்திய காவல் நடைகளுக்கன மக்கள் அமைப்புசார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளதுது.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசதரப்பு சட்டத்தரணி பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வுக்காக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அது ஆட்டிறைச்சி என்று தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை ஆழமான இடத்தில் புதைத்து அழித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதைக்கப்பட்ட இறைச்சி எந்த விதியின் கீழ் புதைக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் சென்னை மாநகராட்சியையும் பிரதிநிதியாக சேர்த்து வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஒத்திவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.