தமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி !

0

அரசியலில் நீ ஒரு ஆலமரம்…அனைத்தும் அறிந்த ஒரு அரசியல் அகராதி….

ஆழம் அளந்திட முடியாத ஆர்ப்பரிப்பு இல்லாத ஆழ்கடல்…..

தமிழ்ச்செல்வா தமிழருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம் நீ……

அதனால் எமக்கெல்லாம் ஆனாய் செல்லம்……

பொன்நகை அணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் புன்னகை அணிந்த புயல் நீ…….

புன்னகை அதுவே உன் தாரக மந்திரம்….

உனது கள்ளம் இல்லா சிரிப்பு அதனால் தான் தரணியில் உனக்கு இவ்வளவு மதிப்பு…..

உனது சிரிப்பு அதன் மேல் நமக்கு அளவற்ற விருப்பு….

எதிரிகளிற்கு உன் மேல் வெறுப்பு…..

அரசியல் போரில் உனக்கிருந்தது அளவிலாத சகிப்பு….

ஊழல் சாதி மத பேதமற்ற அரசியல் ஆட்சி.அதுவே தலைவரால் உனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு….

அதை செவ்வனவே செய்து காட்டினாய்.அதுவே உன் சிறப்பு….

எதிர்பாராத உனது இறப்பு அதனால் தமிழர் அரசியலில் படிந்தது கறுப்பு.

வறுமை ஆக இருந்த தமிழர் அரசியல் தனை பொறுமை என்னும் திறமை கொண்டு எழுதிய பேராசானே இன்று நீ இல்லாமல் அரசியல் ஆனது வெறுமை.

தமிழர் உரிமை அதை மீட்டெடுக்க நீ ஆற்றிய அரசியல் பணி அருமை அருமை….

முதுமை அடைந்தும் நாட்காலியை விட்டு அகலாத நம் அரசியல் தாத்தாக்கள். அது அவர்களின் சிறுமை.

வாழ வேண்டிய வயது தனில் எமக்காய் மாண்டு போன மாவீரனே.உன்னால் தமிழினம் பெற்றது பெருமை…

புன்னகை என்னும் ஆயுதம் கொண்டு அரசியல் இராஜதந்திரிகளையே பூரிப்பிற்குள்ளாக்கிய புரியாத புதிர் நீ…..

சிரித்து சிரித்தே எதிரிகளை சிதைத்த அரசியல் மேதை நீ.

நீ தோற்றத்தில் சாதாரணமானவன்.ஆனால் இராஜதந்திரத்தில் அசாதாரணமானவன்…..

“”கவி பாட நான் ஒன்றும் கவிஞன் அல்ல.ஆனாலும் உனைப்பற்றி துதி பாட துடித்தது என் மனது…..””

 

Leave A Reply

Your email address will not be published.