பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனம் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தங்களை விடுதலை செய்யுமாறும் அல்லது வழக்குகளை விரைவுபடுத்துமாறும் கோரி தமிழ் அரசியல் கைதிகள் பலரும் கடந்த காலங்களாக பலசுற்று உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும் அவர்களுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதியும், பிரதமரும் தங்களது முடிவுகளை விரைவில் அறிவிப்பார்கள் என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.