இந்திய கிர்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இன்று தல தீபாவளி கொண்டாடுகிறார்.
விராட் கோஹ்லி கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தார்.
அவர் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகுதான் பல அடுத்தடுத்த சதங்கள் அடிக்க ஆரம்பித்திருக்கும் விராட் கோஹ்லி தற்போது சச்சின் டெண்டுல்கர் சாதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் உலகின் தலை சிறந்த வீரராக உள்ள விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜீரோ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இன்னிலையில் இந்த ஜோடி காதலில் ஜெயித்து தல தீபாவளியை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.