தொடரும் மர்மம், முன்னாள் போராளியின் அவலநிலை!

0

விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 11.11.2018 அன்று இரவு குமாரபுரம் பகுதியில் வசித்துவந்த 29 அகவையுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற இளம் குடும்பஸ்தரே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குமாரபுரம் புன்னை நீராவியடியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் முன்னாள் போராளியான இவர் மூன்று ஆண்டுகளாக புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 11.11.18 அன்று இரவு வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார். இவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் பிரேத பரிசோதனையின் போது இவரது உயிரிழப்பு தொடர்பில் உறுதியான தவகவலை வெளியிட முடியாத காரணத்தால் இவரது மரபணுக்கள் ஆய்விற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மருத்துவமனை மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளியின் வாழ்விடம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் வருவதால் விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.