நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்தார் மைத்திரி!

0

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது தடவையாகவும், நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை உரிய நாடாளுமன்ற நடைமுறைகளின் படி நிறைவேற்றப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியதாக- நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகருக்கு சிறிலங்கா அதிபர் தகவல் அனுப்பவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் – மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரிய,, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.