“நள்ளிரவில் நுழைந்து அதிகாலை பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடினார் ” நடிகர் விஷால் மீது இளம் பெண் பளீர் புகார்

0

டுவிட்டரில் மீ டூ என்னும் பெயரில் பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் .வைரமுத்து ராதாரவி அர்ஜுன் மற்றும் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டது .

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் மீது இளம் பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார் .

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லைவில் தோன்றிய விஸ்வதர்ஷினி என்ற பெண் விஷால் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார் .

கோபாலபுரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடிக்கு நடுராத்திரி 2 மணிக்கு வந்த விஷால் மீண்டும் , அதிகாலை 4 மணிக்கு பின்வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று குறித்த பெண் குண்டை தூக்கி போட்டுள்ளார் .

விஷால் புரிந்த அனைத்து லீலைகளுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ள குறித்த பெண் நள்ளிரவில் நுழைந்து அதிகாலை பின்வாசல் வழியாக விஷால் ஓடியது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.( சபாஷ் சரியான கேள்வி……….)

டுவிட்டர் மீ டூவில் பெண்கள் தமது பாலியல் கொடுமைகளை தெரிவித்த போது விஷால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் விஷால் மீதே பெண்ணொருவர் புகார் கூறியிருப்பது தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .

அடேங்கப்பா இந்த பூனையும் பால் குடிக்குமா ?ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா விஷால் என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளார்கள் .

தன் மீதான புகாருக்கு விஷால் என்ன பதில் அளிக்க போகின்றார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள் .

 

Leave A Reply

Your email address will not be published.