நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதா?

0

கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்ளும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு நடைபெறும் சம்பவங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை கோவைக்கு முரணாக காணப்படுகின்றது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை மற்றும் நற்பண்புகளில் முக்கியமானவை சில பின்வருமாறு,

சகல உறுப்பினர்களும் சபையின் ஒவ்வொரு அமர்விற்கும், அத்தகைய உறுப்பினர் உறுப்பினர்களாக உள்ள குழுக்களின் ஒவ்வொரு கூட்டத்திற்கும், விடயத்திற்கு ஏற்றவாறு, நாடாளுமன்றத்தின் அல்லது அத்தகைய குழுவின் அனுமதியுடன் வருகை தருதல் வேண்டும்.

0 உறுப்பினர் ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்போது முறையாக ஆடையணித்தல் வேண்டும்.

0 உறுப்பினர்கள் நற்பண்புடன் செயற்பட வேண்டும் அத்துடன் அரசியல் பேச்சுக்களில் விசேடமாக நாடாளுமன்ற விவாதத்தில்

0 உரிய மொழிப்பயன்பாட்டினை பிரயோகிக்க வேண்டும்.

0 உறுப்பினர் எவரும் மற்றவர்களை வசைபாடுதலோ தொல்லை கொடுத்தலோ அல்லது மிரட்டுதலோ ஆகாது.

0 உறுப்பினர் ஒவ்வொருவரும் கௌரவத்துடன், பண்புடன் மற்றும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தை குறைக்காமல் தனது சக உறுப்பினர்களை, நாடாளுமன்ற பணியாட்தொகுதியினரை அத்துடன் நாட்டு மக்களை மதிக்கின்ற முறையில் செயற்பட வேண்டும் என்பது அடிப்படை விடயங்களாகும்.

இவை அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை நாடாளுமன்றத்தில் மீறப்பட்டு, சபாநாயகர் ஆசனத்திற்கு நீர் ஊற்றுவது, வசைபாடுவது, ஆபாச சைகைகளை காட்டுவது, மன்றுக்குள் கூரிய ஆயுதங்களை கொண்டுவருவது, சபாநாயகரை மிரட்டுவது, மற்றைய உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.