பாராளுமன்றில் இன்று பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை ! அப்போ இன்றும் அடிதடி ரவுடிசம் தொடரும் போல !

0

இன்றையதினம் இடம்பெற இருக்கும் பாராளுமன்ற அமர்வின் போது பொது மக்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 16 ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் தரப்பு உறுப்பினர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் .

சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்த விசேட போலீசாரை தாக்கிய மகிந்த தரப்பு ரவுடி எம்பிக்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்து அட்டகாசம் புரிந்தனர் .

மிளகாய் தூளினை கரைத்து ரணில் தரப்பு எம்பிக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் .மகிந்த தரப்பு எம்பிகளின் அடாவடியினை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் 19 ம் திகதி வரை பாராளுமன்றினை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார் .

மீண்டும் இன்று நண்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது பொது மக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும் ஊடகவியலாளர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மைத்திரிக்கும் கட்சி தலைவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது .

இன்றைய அமர்வின் போது ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் மூன்றாவது தடவையாக மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது .

இன்று சமர்பிக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இலத்திரனியல் முறையில் , அல்லது பெயர் மூலமான முறையில் நடாத்த வேண்டும் என்று நேற்றையதினம் மைத்திரி வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது .

இன்றைய தினமும் நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளி ஏற்படும் என்று ஊகிக்கப்படுகின்றது .

 

Leave A Reply

Your email address will not be published.