பாரிய ஆயுதங்களுடன் பொலிஸாரின் தடையையும் மீறிச் சென்ற முச்சக்கரவண்டி!

0

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் ஆயுதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது ஒர் முச்சக்கரவண்டி அதிவேகமாக பயணித்துள்ளது. அதனை அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார் முச்சக்கர வண்டியினை மறித்த போதிலும் நிற்காமல் சென்றுள்ளது.

அதனைடுத்து முச்சக்கரவண்டியினை விரட்டிச் சென்ற பொலிஸார் வவுனியா நகரப்பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடித்து முச்சக்கரவண்டியினை சோதனைக்குட்படுத்தினார்கள்.

இதன் போது பாரிய கத்தி , கோடாரி , பைப் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அத்துடன் முச்சக்கரவண்டியின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் எதற்காக இவ்வாறான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன எனவும் குறித்த நபருக்கும் ஆவா குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா? எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இரவு நேரத்தில் இவ்வாறான பொருட்களுடன் பொலிஸார் நிறுத்துமாறு தெரிவித்த போதிலும் எதற்காக அதிவேகமாக பயணித்தார். எனவும் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.