சமூகவலைத்தளங்கள் சில விடயங்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு உடந்தையாக உள்ளமையை மறுதலிக்க முடியாது .
நாளாந்தம் பேஸ்புக் மூலம் இடம்பெறும் குற்ற செயல்கள் , தற்கொலைகள் , குடும்ப பிரிவுகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றது .
ஆசிரியை ஒருவரை பேஸ்புக் மூலம் மடக்கி அவரின் ஆபாச விடியோவை வைத்து ஆசிரியை ஒருவரை இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது .
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கணவரை பிரிந்து வாழும் இந்த ஆசிரியைக்கு சமூகவலைதளமான பேஸ்புக் மூலமாக ராஜபிரவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது .
ஆசிரியை கணவரை பிரிந்து வாழ்வதை தெரிந்து கொண்ட இளைஞர் ஆசிரியையின் பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டம் தீட்டி மடக்கியுள்ளார் .
நட்பாக ஆரம்பித்த பேஸ்புக் அரட்டை நாளடைவில் பாலியல் பாலமாக மாறியது .ஆசிரியயை நேரில் சந்திக்க வேண்டும் என அழைத்த இளைஞர் அதற்கான திகதியை குறித்துள்ளார் .
கோவையில் ஆசிரியயை நேரில் சந்தித்த இளைஞர் ஆசிரியையிடம் இருந்து ரூ.38 ஆயிரம் பணத்தினை கறந்துள்ளார். அதன் பிறகு ஆசிரியயை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.
ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்ற இளைஞர் ஆசிரியயை பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார்.அதுமட்டுமல்லாது ஆசிரியையின் உடைகளை களைந்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார் .
மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஆசிரியை தனக்கு நடந்த சம்பவத்தினை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் .ஆபாச வீடியோவினை காட்டிய இளைஞர் ஆசிரியரை மிரட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்துள்ளார் .
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஆசிரியை இளைஞரிடம் கெஞ்சியுள்ளார் .அதற்கு ராஜபிரவீன் ஆசிரியயை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார் .
ரூ.2 லட்சம் பணம் கொடுப்பதற்கு ஆசிரியை மறுத்துள்ளார் .எனிலும் லாவகமாக பேசிய இளைஞர் ஆசிரியரை திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை கொடுத்து மேலும் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .அதன் அடிப்படையில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குறித்த கில்லாடி இளைஞரை கைது செய்ய வலைவிரித்துள்ளார்கள் .