நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கான முடிவை வரவேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி, அன்றைய தினம் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை தொடர்ந்து, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
தாம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்த போதிலும், தற்போது திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தீர்மானம் வெளியாகியுள்ளது. இத்தீர்மானம் வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஐ.தே.க.-வில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.