மக்கள் மத்தியில் குண்டுகள் துளைக்காத கவசமுடன் உடையணிந்து வந்த மஹிந்த; காரணம் இதுதான்!

0

பத்தரமுல்லையில் இன்று (05.11.2018) நடைபெற்ற மக்கள் ஆதரவு திரட்டுகின்ற அரசின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குண்டுகள் துளைக்காத கவசமுடன் உடையணிந்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு திட்டமிட்ட விவகாரம் அம்பலமாகியதை அடுத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு ஒன்றிணைந்த எதிரணியினரால் அண்மையில் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அவருக்குரிய பாதுகாப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபையில் வாக்குறுதியளித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய மக்கள் கூட்டத்திற்கு குண்டுகள் துளைக்காத கவசத்தை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.