மனோ கணேசனின் பதவி யாருக்குத் தெரியுமா?

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி இன்று 2 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

அமைச்சர்கள்

பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு – தினேஸ் குணவர்தன

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு – வாசுதேவ நாணயக்கார

இராஜாங்க அமைச்சர்கள்

வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு – கெஹலிய ரம்புக்வெல்ல

பிரதி அமைச்சர்கள்

கலாச்சாரம், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்து அமைச்சு – அசோக பிரியந்த

இதேவேளை, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக நல்லாட்சி அரசில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.