மஹிந்தவும் கோட்டாவும்தான் வேண்டுமாம்: கருணாவின் கோரிக்கை!

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்கபோவதில்லை எனவும் யாழ்ப்பாண தமிழர்களை கூட்டமைப்பு ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் மஹிந்த அரசாங்கத்தில் முன்னாள் பிரதி அமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பதிவின் மூலம் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் தலைவர் நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும், ரணில் விக்ரமசிங்கவின் தலைவர் அமெரிக்கா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கை பொருத்த வரையில் பிரச்சனைகள் இல்லை எனவும் தமக்கான தலைவர் ஒருவரே தேவை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், சட்டவிரோத அரசாங்கத்தின் பிரதமர் என குறிப்பிடப்படும் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொட்டாபய ராஜபக்சவும் இணைந்த தலைமைத்துவம் தமக்கு வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றுமொரு ட்விட்டர் பதவில் ஸ்ரீலங்கா மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நாயகனாக காணப்படும் ரணில் விக்ரமசிங்கவை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமே தமக்கு வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மேற்குலக நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கருணா, தேர்தலே தற்போதைய தேவை எனவும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.