மாவீரர் தினத்தன்று சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியை விசாரிக்கும் சீ.ஐ.டி

0

சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைவிசாரணையொன்றுக்காக சீ.ஐ.டீ என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் அழைப்புவிடுத்துள்ளனர்.

தலைநகர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்டுள்ள 11 இளைஞர்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேகநபரானகடற்படைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சிதலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காகவே நவம்பர்27 ஆம் திகதி அட்மிரல் விஜேகுணரத்னவை விசாரணைக்கு சீ.ஐ.டிஅழைப்புவிடுத்திருக்கின்றது.

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் தானே என்று கூறிக்கொண்டிருக்கும்மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிகாலப்பகுதியில், குறிப்பாக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தலைநகர் கொழும்பின்கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் வைத்து ஐந்து மாணவர்கள் உட்பட 11இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில்கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரிடம் விசாரணைகள்ஒப்படைக்கப்பட்டன.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பாரதூரமானகுற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசில்வா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு, 11 இளைஞர்கள் கடத்தலுடன்சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பிருப்பதைகண்டுபிடித்திருந்தனர். இதனையடுத்து கடற்படை புலனாய்வுப் பிரிவின் கட்டளைத்தளபதியாக இருந்த கடற்கடையின் முன்னாள் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் டி..கே.பீதஸநாயக்க, நேவி சம்பத்” என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர்சம்பத் முனசிங்க உட்பட புலனாய்வாளர்கள் ஏழு பேர் 2017 ஆம் ஆண்டுகைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான கடற்படை புலனாய்வு அதிகாரி “நேவிசம்பத்” என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர் சம்பத் முனசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடனும் தொடர்புபட்டிருந்தவராவார்.

இதேவேளை 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின்பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சிறிலங்கா கடற்படை புலனாயவுப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்குநீதிமன்றினால் பல தடவைகள் அழைப்பாணை விடுக்கப்பட்டும் அவர் நீதிமன்றில்முன்னிலையாகாது தலைமறைவாக இருந்தார்.

இதனையடுத்து அவருக்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம்பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில்வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு அமையகைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத்பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு தலைமறைவாகுவதற்காக நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கானபணத்தை முன்னாள் கடற்படைத் தளபதியான தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல்ரவீந்திர விஜேகுணரத்னவே வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களும் கிடைத்திருப்பதாகவும் குற்றப்புலனாய்வுபிரிவு பொலிசார் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து அவரை விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு கோட்டடை பிரதானநீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கிய நிலையில் பின்னர் அவரை கைதுசெய்துவிசாரணைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டீ யினருக்கு உத்தரவிட்டார்.

எனினும் இதுவரை முப்படைகளின் பிரதான ரவீந்திர விஜேகுணரத்னவைவிசாரணைக்கு உட்படுத்தவோ கைதுசெய்யவோ சீ.ஐ.டியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குசிறிலங்கா அரச தலைவரின் நேரடி தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையிலேயே அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனவை விசாரணைக்குஉட்படுத்துவதற்கான ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைத்து அதற்கான அனுமதியைப்பெற்றிருந்த சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை அதிரடியாக இடமாற்றும் உத்தரவுஇந்தவாரம் விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றத்தைவழங்கியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் அறிவித்திருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மாத்திரமன்றி, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர்பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், கீத் நொயார் கடத்தப்பட்டு சித்த்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கும் பொறுப்பாகஇருக்கும் சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, அந்தசம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ, கடற்படை புலனாய்வுப் பொறுப்பதிகாரிகள்உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்களை கைதுசெய்து நீதிமன்றில்நிறுத்தியிருந்தார்.

புலனாய்வாளர்களின் இந்தக் கைதுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது விசுவாசிகள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன்இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட நிலையிலேயே சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசில்வாவிற்கு இந்த அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இதற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டமுறைபடபாடுகளை அடுத்து இடமாற்ற உத்தரவு இரத்துச்செய்யப்பட்டு மீண்டும் சீ.ஐ.டீ பொலிஸ்பரிசோதகர் நிசாந்த சில்வாவிடம் அனைத்து விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கமையவே 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத்ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்விசாரணைக்கு வருமாறு முப்படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்குசீ.ஐ.டீ அழைப்பு விடுத்திருக்கின்றது.

இதற்கமைய நவம்பர் 27 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்குகுற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு சீ.ஐ.டீ யினரால்நேற்றைய தினமான நவம்பர் 23 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திரவிற்கு எழுத்தமூலம்அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா கடற்படையின் 20 ஆவது தளபதியாக 20015 ஆம் ஆண்டு யூலை மாதம்11 ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பதவிவகித்திருந்தார். இதனையடுத்து கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வபெற்ற அவரை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி முப்படைகளின் பிரதானியாக சிறிலங்கா ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.