மைத்திரியின் நிபந்தனை! ரணிலுக்கு சத்திய சோதனை ! முழி பிதுங்கும் ததேகூ !

0

நாடாளுமன்றத்தில் இன்று ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம்.பிக்கள் அனைவரினதும் பெயர் அழைக்கப்பட்டு அவர்களின் குரல் வாக்குகள் பதியப்பட வேண்டுமென நேற்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.

அப்படியாயின் இதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜே.வி.பியினருக்கும் செக் வைத்துள்ளார் மைத்திரி. பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கே மேற்படி இரண்டு கட்சிகளும் ஆதரவை தெரிவித்தன. ஆனால் அது ரணிலை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான ஆதரவில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

ரணிலை ஆதரித்து இப்போதுள்ள அரசியல் நிலைமைகளில் வேறு அரசியல் தாக்கங்களை எதிர்கொள்ளக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் விரும்புமா என்பதே இப்போதுள்ள கேள்வி. அதனால், அடுத்த பிரதமர் யார் என்பதில் சர்ச்சைகள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.