யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் கோரவிபத்து ! நால்வர் பலி ! 20 பேர் படுகாயம் ! படங்கள் உள்ளே

0

நீர்கொழும்பு – சிலாபம் வீதியின் வலஹாபிடிய பிரதேசத்தில் அதிசொகுசு பேரூந்தொன்று ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மாரவில காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.