விசேட செய்தி; நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ள மஹிந்த ஆதரவாளர்கள்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள ´மக்களின் மகிமை´ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஆர்ப்பாட்ட பேரணி நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

புதிய அரசாங்கத்திற்கு உள்ள மக்கள் சக்தியினை வெளிப்படுத்துமுகமாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று மதியம் 12 முதல் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேவேளை பாராளுமன்றத்தில் ரணில் மற்றும் மஹிந்த தரப்பினர்க்கான பெரும்பான்மையினை நிரூபிக்குமுகமாக எதிர்வரும் 14ஆம் நாள் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.