விஜய் 63 படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

0

விஜய் – அட்லி மூன்றாவது முறையாக இணையும் தளபதி 63 படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். விவேக் கடைசியாக விஜய்யுடன் இணைந்து குருவி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு தளங்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh

Leave A Reply

Your email address will not be published.