தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்திபூங்கா சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிசார்பான அரசியல் ஆர்வலர்கள், கலந்து கொண்டிருந்தனர்.
‘மட்டக்களப்பு மக்களின் மானத்தைப் போக்கிய அமல், விலைபோக எல்லோரும் வியாழேந்திரன் இல்லை, ஜனநாயகமா பண நாயகமா நாடாளுமன்றத்தை உடன் கூட்டு, 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் வேண்டாம், ரணில் பக்கம் ஜனநாயகவாதிகள், மஹிந்த பக்கம் கொலைகாரர்கள், ஜனாதிபதியே ஜனநாயகத்தைக் காப்பாற்று’ உள்ளிட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.