அடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு!

0

மாநிலத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிற்குப் பின்னர் பிரதமராக ராகுல்காந்தி   உருவாகுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்ப மொய்லி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்து விதமான தலைமைப் பண்புக்கான சோதனைகளிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வெற்றியடைந்துவிட்டார். இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் பிரதமராக ராகுல்காந்தி உருவாகுவார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றபின் அந்தக் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி என்பதால், அந்தக் கட்சியினரால் ராகுல் காந்தி பாராட்டப்பட்டு வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், பிரதமர் நரேந்திர மோடியின் தவறான, மோசமான நிர்வாகத்தை மக்கள் மிக நீண்டகாலமாகப் பொறுத்திருந்தனர்.

இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் மத்திய அரசு மீதான மக்களின் வெறுப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க.வினர், சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது தனிப்பட்ட ரீதியான அவமதிப்பு பரப்புகளை மேற்கொண்டனர்.

இதை மக்கள் தாங்கிக்கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் வெற்றி மட்டுமல்ல, கட்சித் தலைமையின் வெற்றியும் கூட” என வீரப்ப மொய்லி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.