அரைக் கால்சட்டையுடன் சென்ற நாமலை உள்ளாடையுடன் அனுப்புவோம் ! ராஜித சூளுரை ! சபாஷ் செய்யுங்க பாஸ்

0

சட்டவிரோத அரசு அமையப்பெற்றதும் அரைக் கால்சட்டை அணிந்து காவல்துறை நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்குள் சென்று சலசலப்பை உருவாக்கிய நாமல் ராஜபக்சவை உள்ளாடையுடன் அனுப்பப் போவதாக சூளுரைத்துள்ளார் ராஜித சேனாரத்ன.

காலிமுகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வெற்றிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ராஜபக்ச குடும்பம் இனி ஆட்சியதிகாரத்துக்கு வருவதை நினைத்துப் பார்க்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26 மஹிந்த அதிரடியாக பிரதமராக்கப்பட்ட போது காவல்துறை நிதி மோசடிப் பிரிவினரைத் தண்டிக்கக் காத்திருப்பதாக தெரிவித்து வரும் நாமல் அங்கு அரைக்கால் சட்டையுடன் நுழைந்து எச்சரிக்கைத் தொனியில் நடந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.