அலரி மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்ற ரணில்!

0

இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் , கொழும்பு 07இல் அமைந்துள்ள விக்ரமசிங்க குடும்பத்திற்கு சொந்தமான தமது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கியிருக்க தீர்மானித்ததுடன் கடந்த 51 நாட்களாக பிரதமர் ரணில் உள்ளிட்டவர்கள் அலரி மாளிகையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தனர்.

இதேவேளை கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி முதல் கடந்த 26ம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இரவு வேளைகளில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.