ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் ஒரு சிறுவனின் கதை – ‘நடுகல்’ ஈழ நாவல்

0

நடுகல் நாவல் போர் சிறுவர்களின் வாழ்வை எப்படி சிதைக்கின்றது என்று பேசுகின்றது. இந்த நாவலில் வரும் இரு சிறுவர்களை எவருக்கும் பிடிக்குமாம். முழுக்க முழுக்க சிறுவர்களின் பார்வையில், சிறுவர்களின் வாழ்வை இந்த நாவல் பேசுவதாக நாவல் ஆசிரியர் தீபச்செல்வன் கூறியுள்ளார்.

அத்துடன் 2019ஆம் ஆண்டின் சென்னை புத்தக கண்காட்சியில் , ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல் கவனத்தை ஈர்த்துள்ளது என்று நாவலை வெளியிட்டுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன் கூறியுள்ளார்.

வலிமையான கவிதைகள் வாயிலாக நன்கு அறியப்பட்டவர் கவிஞர் தீபச்செல்வன். ஈழத்தில் களிநொச்சியை சேர்ந்த தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல் போருக்குப் பின்னர் கிளிநொச்சியிலிருந்து வெளிவரும் முதல் நாவலாகும்.

2019ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியையொட்டி இந்த நாவல் வெளியாகியுள்ளது. ஈழப் போரின் போது ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் ஒரு சிறுவனின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நாவல் குறித்து தீபச்செல்வன் தனது ஆசிரியர் உரையில் கூறியது, “2010-2012 கிளிநொச்சியின் நிகழ்காலத்திலும், அதற்கு முந்தைய இருபந்தைந்து ஆண்டுகள் முன்னோக்கிய நினைவுகளின் பின்னணியில் இரண்டு சிறுவர்கள் பற்றிய கதையும் அவர்களை சூழவிருந்த மாந்தர்களின் கதையும்தான் நடுகல். குழந்தைகளின் கதை மாத்திரமல்ல, குழந்தைகள் மொழிந்ததுமே இந்நாவல்.”

Leave A Reply

Your email address will not be published.