இசையமைப்பாளருடன் நெருக்கம் – காதல் வலையில் மடோனா செபாஸ்டின்

0

மடோனா செபாஸ்டின் இசையமைப்பாளருடன் ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். #MadonnaSebastian

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மடோனா தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.

படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன்’’ என்றார்.

இந்தநிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தில், ‘‘சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடோனா செபாஸ்டியனும், ராபி ஆபிரகாமும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. எனினும் மடோனா அதனை மறுக்கவில்லை. #MadonnaSebastian

Leave A Reply

Your email address will not be published.