இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம் ! ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி.!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கை 96 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாத காலங்களுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்ளும் வகையில் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கை மீது இன்று காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 4.20 மணிவரை விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் பின்னர் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் அறிக்கைக்கு ஆதரவாக 96 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வாக்களிப்பில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்தனர்.இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசாங்கம் சமர்ப்பித்த முதல் அறிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.