இந்தோனேசிய சுனாமி அனர்த்தம்: உயிரிழப்புகள் 281ஆக அதிகரிப்பு

0

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அனக் கிரகட்டு என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமி, சுமாத்ரா மற்றும் ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கியது. இதில் கட்டங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பலர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

காணாமல் போனோரை கண்டறியும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காயமடைந்தவர்களுக்கு ஆங்காங்கே கொட்டகைகள் அமைத்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, நிவாரண பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் இந்தோனேசியாவை உலுக்கிய இரண்டாவது சுனாமி அனர்த்தம் இதுவாகும். கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி சுலவெசி தீவை சுனாமி பேரலை தாக்கியிருந்தது.

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு இந்த ஆழிப் பேரலை அனர்த்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.