இலங்கையில் புதிய வகை துப்பாக்கி? அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு!

0

இலங்கையில் புதிய வடிவிலான துப்பாக்கி ஒன்றை பொலீசார் மீட்டுள்ளனர். பார்ப்பதற்கு பேனாவை போல் காட்சிதரும் சிறியரக துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. யாரும் சந்தேகப்படாதவாறு வெளிப்படையாக கொண்டு செல்லக் கூடிய மேற்படி துப்பாக்கி மிகவும் ஆபத்தானது என தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த துப்பாக்கியை கண்ட பொலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.