எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது இலக்கல்ல ! மாவை தெரிவிப்பு

0

எதிர்க்­கட்சி தலைவர் பத­விக்­காக போரா­டு­வதோ அல்­லது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு போட்­டி­யாக மாறு­வதோ எமது நோக்­க­மல்ல. அனைத்து தரப்­பி­ன ­ரு­டைய ஆத­ர­வுடன் பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சியல் சாச­ன­மொன்றை நிறை­வேற்றி அத­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெறு­வதே நோக்­க­மாகும் என யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை. சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சி தலைவர் பத­விக்­காக தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு போரா­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே. இது பற்றி தங்கள் கருத்தென்­ன­வென வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,

தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு ஒரு­போட்­டி­யாக இருப்­பதோ அல்­லது மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவை பத­வி­யி­லி­ருந்து இல்­லாமல் செய்­வதோ எங்கள் நோக்­க­மல்ல. சபா­நா­யகர் விட்ட தவ­று­களை நாங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தாலும் அல்­லது எமது பக்க நியா­யத்தை எடுத்­துக்­கூ­றி­யி­ருந்­தாலும் பாராளுமன்ற சம்­பி­ர­தா­யங்கள் விதி முறைகள் மீறப்­பட்­ட­தாக நாங்கள் வலி­யு­றுத்­திக்­காட்­டி­யி­ருந்­தாலும் எதிர்க்­கட்சிப் பத­விக்­காக மீண்டும் ஒரு அர­சியல் நெருக்­க­டியை உரு­வாக்கி அதில் குளிர்­காய தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு விரும்­பவில்லை. மிக கவ­ன­மாக இருக்­கிறோம். காரணம் பதவி எங்கள் நோக்­க­மல்ல.

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­டமோ ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­டமோ இன்­றைய அர­சாங்­கத்­தி­டமோ நாங்கள் பத­வி­களை கோரி­ய­தில்லை.

தேசிய அர­சாங்­கத்தில் பங்­காளி கட்­சி­யா­கவும் இருந்­த­தில்ைல. ­அ­மைச்­சுப்­ப­த­வி­களை கோர­வு­மில்லை. வீட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்டு 16 உறுப்­பி­னர்­களை பெற்று பாராளுமன் றில் அடுத்த பெரும்­பான்­மை­யாக இருந்த கார­ணத்­தினால் தான் எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்த்­தப்­பட்டோம். தற்­போ­தைய சூழ்நிலையில் ஒரு­நெ­ருக்­க­டியை உரு­வாக்கி பத­வியை தக்­க­வைக்­கவோ சுவீ­க­ரிக்­கவோ விரும்­ப­வில்லை.

பாரா­ளு­மன்றில் அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்க பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. 62 இலட்சம் மக்கள் ஜனா­தி­ப­தி­யையும் பொது தேர்தலில் தேசிய அர­சாங்­கத்­தையும் கொண்­டு­வர ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தார்கள். இதனால் மைத்­தி­ரியும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் ஆகிக்­கொண்­டார்கள். அந்த ஆட்­சியில் அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற ஏக­ம­ன­தான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.புதிய அர­சியல் சாச­னத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நோக்­க­மாக இருந்த கார­ணங்கள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­ப­ட­வேண்டும், தேர்தல் முறை மாற்­றப்­ப­ட­வேண்டும்,

அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என­ப­தாகும். அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக வழி­காட்டல் குழு, உப­குழு என அமைக்­கப்­பட்­ட­துடன் பின் 10 பேர் கொண்ட நிபு­ணர்­கு­ழுவும் அமைக்­கப்­பட்­டது.நவம்பர் 7 ஆம் திகதி பாரா­ளு­மன்­றுக்கு அது சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில்தான் பாரா­ளு­ம­ன்றம் கலைக்­கப்­பட்­டது.

தற்­பொ­ழுது உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் அர­சாங் கம் அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கி தமிழ் மக்­களின் நீண்­ட­கா­லப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வ­ரும் பெப்ரவரி 4 ஆம் திக­திக்கு முன் அர­சியல் சாசன முன்­வ­ரைபை பாரா­ளு­ம­ன்றில் சமர்ப்­பிப்பேன் என அண்­மையில் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்

இது­தொ­டர்­பான அறி­வித்­த­லையும் அவர் விடுத்­துள்ளார். அர­சியல் சாச­னத்­தின்­மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வும் முன்­வைக்­கப்­ப­டு­மென கூறி­யுள்ளார்.இது­பற்றி கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­ன­வு­டனும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம். அவர் ஒப்­புதல் தந்­துள்ளார்.

தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பைப் ­பொ­றுத் ­த­வரை அர­சியல் சாசனம் பாரா­ளு­மன்றில் நிறை­ வேற்­ற­லுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சியம் என்­பதை கருத்தில் கொண்டு எமது முன்னெடுப்புக்களை கவனமாக மேற் கொண்டுவருகிறோம். எதிர்க்கட்சி பதவியை குறிவைத்து நாம் இயங்கவில்லை. 151 மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றில் எம்முடன் உள்ளனர் என்பதை நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் நிரூபித்துள்ளோம்.

எனவேதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு நிறைவேற்றக்கூடிய அரசியல் யாப்பை நிறைவேற்றி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டு மென்ற இலக்கில் எமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.